

பிரபல பாலிவுட் இயக்குநர் ராஜ்குமார் ஹிரானி மீது பெண் ஒருவர் பாலியல் குற்றச்சாட்டு தொடுத்துள்ளார்.
முன்னபாய் எம்பிஎஸ், 3 இடியட்ஸ், பிகே ஆகிய பிரபல படங்களை இயக்கியவர் ராஜ்குமார் ஹிரானி.
இவரது இயக்கத்தில் ரன்பீர் கபூர் நடித்த ’சஞ்சு’ படம் கடந்த வருடம் வெளிவந்து வெற்றி பெற்றது. இந்த நிலையில் இந்தப் படத்தில் உதவி இயக்குனராக பணி புரிந்த பெண் ஒருவர் ராஜ்குமார் ஹிரானி மீது பாலியல் குற்றச்சாட்டு தொடுத்துள்ளார்.
பாலியல் குற்றச்சாட்டு குறித்து அப்பெண் (பெயர் குறிப்பிடப்படவில்லை )ஊடகங்களிடம் கூறியிருப்பதாவது, ‘‘அவர் என்னை குறித்த பேசிய வார்த்தைகள், என்னிடம் நடந்து கொண்ட விதத்தால் நான் 6 மாத சரியாக உறங்காமால் துன்பப்பட்டேன். எனது வேலை என்னிடமிருந்து செல்லாமல் இருப்பதற்காக நான் அதனை பொறுத்துக் கொண்டேன்” என்று கூறியுள்ளார்.
ஆனால் இந்தக் குற்றச்சாட்டுக்கு ராஜ் குமார் ஹிரானி தரப்பு மறுத்துள்ளது.