

பாலிவுட்டின் நட்சத்திர தம்பதி ரன்வீர் சிங்- தீபிகா படுகோன். இத்தாலியின் கோமோ ஏரிப் பகுதியில் கோலாகலமான திருமணம் மூலம் இல்லற வாழ்வில் நுழைந்த தீபிகா படுகோன் - ரன்வீர் சிங் தம்பதியினர் அடுத்தடுத்து முன்னுதாரணமான செய்திகளுக்காகப் பாராட்டுக்களை அள்ளிவருகின்றனர். கிடைக்கும் இடைவெளிகளில் இருவரும் மாறி மாறி அன்பைப் பொழியவும் தவறுவதில்லை.
திரையுலகில் இருவரும் பரபரப்பாக இருக்கும் அதேவேளையில் தீபிகா படுகோன், தனது கணவர் ரன்வீர் சிங்குக்கு 3 நிபந்தனைகள் விதித்திருக்கிறார்.
இதுகுறித்து சினிமா நிகழ்ச்சியொன்றில் ரன்வீர் பகிர்ந்துகொண்டார். இரவு மிகவும் தாமதமாக வீடு திரும்பக் கூடாது, சாப்பிடாமல் வீட்டை விட்டுக் கிளம்பக் கூடாது, தன்னுடைய போன் காலை மிஸ்டு காலாக மாற்றிவிடக் கூடாது என்பதே அந்த 3 நிபந்தனைகள்.
முன்னதாக இருவரும் தத்தமது பெயரின் சர்நேமை மாற்றப்போவதில்லை என்று தீபிகா கூறியிருந்தார். கடும் முயற்சிகள் மூலம் தங்கள் பெயருக்கென்ன தனித்த அடையாளத்தைப் பெற்றிருக்கும் நிலையில் சர்நேம் மாற்றம் அவசியமில்லை என்று விளக்கமும் அளித்தார். அதையடுத்து தீபிகாவின் சர்நேமை ஏற்றுக்கொண்டு ‘ரன்வீர் சிங் படுகோன்’ என்று பெயர் மாற்றம் செய்யவும் தயார் என்று ரன்வீர் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.