

பாலிவுட் நட்சத்திரமான அமிதாப் பச்சனுக்கு டிவிட்டர் சமூக வளைதளத்தில் இப்போது 10 மில்லியனுக்கும் அதிகமான ரசிகர்கள் உள்ளனர். அவரது இலக்கு அதனை இரண்டு மடங்காக்குவதுதானாம்.
“10 மில்லியன்! என் ரசிகர்கள் அனைவருக்கும் நன்றி. எனது அடுத்த இலக்கு அதனை 20 மில்லியன் ஆக்குவதே” என்று டிவிட்டரில் அமிதாப் கூறியுள்ளார்.
71 வயதாகும் அமிதாப் தான் இந்தியாவிலேயே மிக அதிகமான ரசிகர்களை டிவிட்டரில் வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
திரையுலகம் சார்ந்த கேள்விகள் மட்டுமல்லாமல் சமூகம், குடும்பம் போன்ற பல விஷயங்களைப் பற்றி தனது ட்விட்டர் பக்கத்தில் சகஜமாக பதிவு செய்து வருகிறார். ரசிகர்கள் கேட்கும் கேள்விகளுக்கும் உடனடியாக பதிலளிக்கிறார். இதனாலேயே அவருக்கு ரசிகர்கள் கூட்டம் அதிகரித்துவிட்டது. இதுவரை அவர் பதிந்திருக்கும் ட்வீட்களின் எண்ணிக்கையே 30,000க்கு மேல்.
அமிதாப் தற்போது புதிதாக ‘பச்சன் போல்’ (BachchanBol) என்ற பெயரில் புதன் கிழமை தோறும் நகைச்சுவை மற்றும் சுவாரசியமான விஷயங்களை டிவிட்டரில் ரசிகர்களுடன் பகிர்ந்துகொள்கிறார்.