இந்தியில் பாகுபலி எடுத்தால் ஹீரோ, ஹீரோயின் யார்?- ராஜமெளலி பதில்

இந்தியில் பாகுபலி எடுத்தால் ஹீரோ, ஹீரோயின் யார்?- ராஜமெளலி பதில்
Updated on
1 min read

தனியார் தொலைக்காட்சி நேர்காணல் ஒன்றில் கலந்து கொண்ட 'பாகுபலி' இயக்குநர் ராஜமெளலியிடம் ஒருவேளை 'பாகுபலி' படத்தை இந்தியில் எடுத்தால் பாகுபலி, பல்வாள் தேவன் கதாபாத்திரங்களில் யாரை நடிக்க வைப்பீர்கள் எனக் கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு அவர் அளித்த பதில்கள் சுவாரஸ்யமாக அமைந்தன.

அந்த நிகழ்ச்சியில் பாகுபலியாக நடித்த பிரபாஸ், பல்வாள் தேவனாக நடித்த ராணா டகுபதி, இயக்குநர் ராஜமெளலி ஆகிய மூவருமே கலந்து கொண்டனர்.

அப்போது மூவரிடமுமே இந்தக் கேள்வி கேட்கப்பட்டது. ஆனால், மூவருமே பாகுபலியாக பிரபாஸ், பல்வாள் தேவனாக ராணாவைத் தவிர வேறு யாரையும் யோசித்துக்கூடப் பார்க்க முடியாது என்று கூறினர்.

ஆனால், தேவசேனா கதாபாத்திரத்துக்கு பாலிவுட்டில் தீபிகா படுகோனே மிகப் பொருத்தமாக இருப்பார் என்றனர். தமிழ் மற்றும் தெலுங்கில் தேவசேனா கதாபாத்திரத்தில் அனுஷ்கா நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

பிரபாஸ், ராணா இருவரில் பிரபாஸ் தான் அதிகமாக குறும்பு செய்யும் நபர் என்றும் ராணா எப்போதும் தனித்து இருக்கவே விரும்புவார் என்றும் ராஜமெளலி கூறினார்.

 அதேபோல், ஹைதராபாத்தில் உள்ள தனது பண்ணை வீட்டில் பிரம்மாண்ட விருந்து நிகழ்ச்சிகள் நடத்துவது பிரபாஸுக்கு மிகவும் பிடித்தமான பொழுதுபோக்கு என்றும் கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in