திருமணத்தின்போது தீபிகா படுகோன் அணிந்திருந்த மோதிரத்தின் விலை தெரியுமா?

திருமணத்தின்போது தீபிகா படுகோன் அணிந்திருந்த மோதிரத்தின் விலை தெரியுமா?
Updated on
1 min read

பாலிவுட்டின் பிரபல நட்சத்திரங்களான ரன்வீர் சிங் மற்றும் தீபிகா படுகோன் திருமணம் நவம்பர் 14 மற்றும் 15-ம் தேதிகளில் மிகப் பிரம்மாண்டமான முறையில் இத்தாலியிலுள்ள லேக் கோமா நகரில் நடைபெற்றது.

கொங்கினி கலாச்சார முறைப்படியும் அடுத்த நாள் சிந்தி கலாச்சாரப்படியும் நடைபெற்ற இந்த பிரம்மாண்ட விழாவில் உறவினர்களும் நெருங்கிய நண்பர்களும் கலந்து கொண்டனர்.

பல வருடங்களாக இருவரும் காதலித்து வந்த நிலையில் தீபிகா படுகோன் ஹாலிவுட்டிலும் கால் பதித்தார். சில வாரங்களுக்கு முன் தங்களது திருமணச் செய்தியை கடந்த மாதம்  ரன்வீர் சிங்கும், தீபிகாவும் ட்விட்டரில் ஒரு சேர அறிவித்தனர். தற்போது திருமணம் முடிந்த நிலையில் தங்களது திருமணம் தொடர்பான புகைப்படங்களை ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டனர்.

இதில், திருமணத்தின்போது தீபிகா படுகோன் கை விரலில் அணிந்திருந்த கல் வைத்த மோதிரத்தின் விலை குறித்து சமூக வலைதளங்களில் பெரும் விவாதமே கிளம்பியது.

இந்த நிலையில் இதுகுறித்து பாலிவுட்டின் முக்கிய ஊடகங்களில் தகவல் வெளியாகியுள்ளது. அதில் தீபிகா அணிந்திருக்கும் மோதிரம் சுமார் 1 .3 கோடியிலிருந்து 2.7 கோடியாக இருக்கும் என்று செய்தி  வெளியாகியுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in