

#Metoo விவகாரத்தில் பிரபல பாலிவுட் நடிகர் அலோக் நாத் மீது பலாத்கார வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
திரைத்துறை மற்றும் பல்வேறு துறைகளில் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான பெண்கள் சமீபத்தில் #Metoo பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். இந்தப் பிரச்சாரத்தின் மூலம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்ட பல பிரபலங்களுக்கு எதிராகக் குரல்கள் எழுந்தன.
அந்த வகையில் பாலிவுட்டில் நாடகங்கள் மற்றும் திரைப்படங்களில் நடித்து பிரபலமான அலோக் நாத் மீது இயக்குநர் வினிதா நத் பாலியல் புகார் அளித்தார்.
அந்தப் புகாரில் வினிதா, ''19 வருடங்களுக்கு முன்னர் அலோக் நாத் விருந்து ஒன்றில் தன்னிடம் தவறாக நடந்துகொண்டார்'' என்று கூறியுள்ளார்.
இந்நிலையில் வினிதா அளித்த புகாரின் அடிப்படையில் அலோக் நாத் மீது ஒஷிவார காவல் நிலையத்தில் பலாத்கார வழக்குப் பதிவு செய்யபப்ட்டு முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில் விரைவில் அலோக் நாத் விசாரணைக்கு அழைக்கப்படலாம் என்று போலீஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.