‘‘வாழ்க்கையின் ஆகச் சிறந்த பரிசு’’ - ஆராத்யாவின் பிறந்தநாளில் ஐஸ்வர்யா ராயைக் கொண்டாடிய அபிஷேக் பச்சன்

‘‘வாழ்க்கையின் ஆகச் சிறந்த பரிசு’’ - ஆராத்யாவின் பிறந்தநாளில் ஐஸ்வர்யா ராயைக் கொண்டாடிய அபிஷேக் பச்சன்
Updated on
1 min read

வாழ்க்கையின் ஆகச் சிறந்த பரிசை அளித்த ஐஸ்வர்யா ராய்க்கு நன்றி என்று தெரிவித்துள்ளார் அபிஷேக் பச்சன்.

பாலிவுட்டின் பிரபலத் தம்பதி அபிஷேக் பச்சன், ஐஸ்வர்யா ராய். இருவரும் இன்று (நவ.16) மகள் ஆராத்யா பச்சனின் 7-வது பிறந்தநாளைக் கொண்டாடினர்.

இதுதொடர்பாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள அபிஷேக் பச்சன், ''குழந்தையின் பிறந்தநாள் அவளின் தாயைக் கொண்டாடாமல் முடிவடையாது. மகளுக்கு பிறப்பை அளித்ததற்கு, அவளின் மேல் அன்பைச் செலுத்துவதற்கு, அவளைப் பார்த்துக் கொள்வதற்கு.. எல்லாவற்றுக்கும் மேலான ஆச்சரியப் பெண்ணாக இருப்பதற்கு...! என்னுடைய திருமதிக்கு - வாழ்க்கையின் ஆகச் சிறந்த பரிசான நம் மகளை அளித்ததற்கு நன்றி! என்னுடைய தேவதை ஆராத்யாவுக்கு மீண்டும் பிறந்தநாள் வாழ்த்துகள்'' என்று தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in