கோபக்கார சிறுமி முதல் அறிவார்ந்த பேரரசி வரை: பாகுபலி சிவகாமியின் கதை நெட்ஃப்ளிக்ஸில் வெளியாகிறது

கோபக்கார சிறுமி முதல் அறிவார்ந்த பேரரசி வரை: பாகுபலி சிவகாமியின் கதை நெட்ஃப்ளிக்ஸில் வெளியாகிறது
Updated on
1 min read

உலக அளவில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி, அதைப் பூர்த்தி செய்த படம் 'பாகுபலி' மற்றும் 'பாகுபலி 2'. ராஜமௌலி இயக்கத்தில் பிரபாஸ், அனுஷ்கா, சத்யராஜ், ரம்யாகிருஷ்ணன், நாசர், ராணா, தமன்னா நடிப்பில் வெளியான இப்படம் விமர்சன ரீதியாகவும், மக்களிடையேயும் பெரும் வரவேற்பைப் பெற்றது.

இந்நிலையில் ரம்யா கிருஷ்ணன் நடித்த வலிமையான கதாபாத்திரமான சிவகாமியின் வரலாற்றைத் தொடராக எடுக்கிறது நெட்ஃப்ளிக்ஸ். இரண்டு சீசன்களாக வெளியாகும் சிவகாமியின் கதையில் முதல் சீசனில் 9 எபிசோடுகள் இருக்கின்றன. இதில் கோபக்கார, பழிவாங்கும் சிறுமியான சிவகாமி எப்படி அறிவாற்றல் மிகுந்த, யாரோடும் ஒப்பிட முடியாத அரசி ஆகிறார் என்னும் கதை விவரிக்கப்பட்டுள்ளது.

இதில் சிவகாமியின் கதாபாத்திரத்தில் மிருணால் தாக்கூர் நடிக்கிறார். ஸ்கந்ததாசா பாத்திரத்தில் ராகுல் போஸ் நடிக்கிறார்.

சிவகாமியின் கதை, 3 பகுதி நாவலாக ஆனந்த் நீலகண்டனால் எழுதப்பட்டது. இதைப் பின்பற்றி எடுக்கப்படும் தொடரில் அதுல் குல்கர்னி, வக்கார் ஷேக், ஜமீல் கான், சித்தார்த் அரோரா மற்றும் அனூப் சோனி ஆகியோர் நடிக்கின்றனர்.

இத்தொடர் அரசி சிவகாமி மற்றும் அவர் ஆட்சி செய்த பேரரசின் எழுச்சியைப் பறைசாற்றும் என்று நெட்ஃப்ளிக்ஸ் தெரிவித்துள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in