

ஏக் வில்லன் படத்திற்குப் பிறகு மீண்டும் திரைப்படம் ஒன்றில் சித்தார்த் மல்ஹோத்ராவும், ரித்திஷ் தேஷ்முக்கும் இணைய உள்ளனர்.
சமீபத்தில் பாலிவுட்டில் வெளியாகி வெற்றி பெற்ற சத்யமேவ ஜெயதே திரைப்படத்தின் இயக்குனர் மிலாப் சாவேரி தனது அடுத்த படைப்புக்கு தயாராகி இருக்கிறார்.
இப்படத்தில் இயக்குனர் மிலப் சாவேரி இயக்கத்தில் பாலிவுட் நடிகர்கள் சித்தார்த் மல்ஹோத்ரா மற்றும் ரித்திஷ் தேஷ்முக் மீண்டும் இணைந்து நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளனர். இன்னும் பெயரிடப்படாத இத்திரைப்படத்தின் ஃபஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் படக்குழுவால் எடுக்கப்பட்டுள்ளது. இது ஒரு ஆக்ஷன் படம் என்று முதற்கட்ட தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நான்கு வருடங்களுக்கு சித்தார்த் மல்ஹோத்ரா நாயகனாகவும் , ரித்திஷ் தேஷ்மும் வில்லானாவும் நடித்த ஏக் வில்லன் திரைப்படம் பிரமாண்ட வெற்றியை பெற்றது. இதனைத் தொடர்ந்து இந்த இணை மீண்டும் இணைந்திருப்பதால் இப்படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு நிலவுகிறது.