

பாலிவுட் படத்தில் நடனம் ஆட வேண்டும் என்ற தனது நீண்ட நாள் ஆசையைப் பகிர்ந்திருக்கிறார் ஹாலிவுட் நடிகர் வில் ஸ்மித்.
மேன் இன் ப்ளாக் புகழ் ஹாலிவுட் நடிகர் வில் ஸ்மித் மும்பையில் தனியார் நிகழ்ச்சி ஒன்றில் இன்று (சனிக்கிழமை) கலந்துகொண்டார்.
இதில் வில் ஸ்மித் பேசும்போது, "பாலிவுட் பாடலுக்கு நடனம் ஆட வேண்டும் என்பது என்னுடைய நீண்ட நாள் ஆசைகளில் ஒன்று. பாலிவுட் நடிகை ஐஸ்வர்யா ராயுடன் 15 ஆண்டுகளுக்கு முன்பு நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. ஆனால் ஏதோ காரணங்களால் அது கைவிடப்பட்டது” என்று தெரிவித்தார்.
பஞ்சாபியர்களின் பாரம்பரிய நடனமான, பாங்ரா நடத்துக்கு தான் ஒரு மிகப் பெரிய ரசிகர் என்று வில் ஸ்மித் நேர்காணல் ஒன்றில் முன்னரே தெரிவித்திருந்தார். இதனைத் தொடர்ந்து பாங்ரா நடனத்தை பிரபல பாலிவுட் நடிகர் ஃபரான் அக்தருடன் இணைந்து வில் ஸ்மித் ஆடினார்.