சாய்னா திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக்கை வெளியிட்ட பாலிவுட் நடிகை சாரதா கபூர்

சாய்னா திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக்கை வெளியிட்ட பாலிவுட் நடிகை சாரதா கபூர்
Updated on
1 min read

பாட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால் வாழ்க்கைக் கதை சாய்னா என்றபெயரில் திரைப்படமாக தயாரிக்கப்பட்டு வருகிறது. இப்படத்தின் பர்ஸ்ட் லுக்கை பாலிவுட் நடிகை சாரதா கபூர் இன்று வெளியிட்டுள்ளார்.

சாரதா கபூர் தனது இன்ஸ்டாகிராம் பதிவில், 2012 லண்டன் ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு வெண்கலம் ஈட்டித்தந்த விளையாட்டில் சாய்னா பங்கேற்பது போன்று, தான் நடித்துள்ள காட்சியை எடுத்துக்காட்டும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

இப்புகைப்படத்தில் சாரதா இந்திய கொடியுடன்கூடிய ஒரு விளையாட்டு ஆடையை அணிந்திருக்கிறார். கையில் பந்தாட்ட மட்டையை ஏந்தியிருக்கிறார்.

தனது படப்பிடிப்பு அனுபவத்தை பகிர்ந்துகொண்ட சாரதா கபூர், ''இப்படப்பிடிப்பு நடக்கும் நாட்களில் சாய்னா வீட்டுக்குச் சென்று பார்வையிட்டேன். அப்போது சாய்னாவின் பெற்றோர்கள் என்னிடம் மிகுந்த அன்பு செலுத்தினார்கள். அவர்களில் குடும்பத்தில் ஒருவராகவே என்னை நடத்தினார்கள். அங்கே அவர்களைப் பார்க்க மிகவும் நன்றாக இருந்தது.'' என்று தெரிவித்துள்ளார்.

கடந்த வாரம் செப்டம்பர் 22 அன்று ''சாய்னா'' திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட்டது. டி-சீரியஸ் நிறுவனத்திற்காக பூஷண் குமார் தயாரிக்கும் இப்படத்தை அமோல் குப்தே இயக்கி வருகிறார்.

காமன்வெல்த் 2018ல் தங்கம் வென்ற சாய்னா நேவால் (28) ஐதராபாத்தைச் சேர்ந்தவர். இவர் வரும் டிசம்பரில் தனது 10 ஆண்டுகால நண்பரும் பேட்மின்டன் வீரருமான காஷ்யப்பை மணக்கிறார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in