எங்கள் பங்களாவுக்கு ராமாயண் என்ற பெயர் எப்படி வந்தது?: குடும்ப ரகசியத்தை உடைக்கும் சோனாக்ஷி சின்ஹா

எங்கள் பங்களாவுக்கு ராமாயண் என்ற பெயர் எப்படி வந்தது?: குடும்ப ரகசியத்தை உடைக்கும் சோனாக்ஷி சின்ஹா
Updated on
1 min read

பாலிவுட் நடிகை சோனாக்ஷி சின்ஹா தனது இல்லத்திற்கு ராமாயண் என்று பெயர் சூட்டியுள்ளதற்கான காரணத்தை தற்போது தெரிவித்துள்ளார்.

சல்மானுக்கு ஜோடியாக தபாங் எனும் பாலிவுட் படத்தில் தோன்றிய முதல் அறிமுகமே அவருக்கு வெற்றியைத் தேடித்தந்தது. அடுத்ததாக தயாராகி வரும் தபாங் -3 அவரது 30வது படம்.

சோனாக்ஷி, சினிமாவை விட ’இண்டியன் ஐடல்’ 10’ என்ற டிவி ரியாலிடி ஷோவில்தான் அதிகம் கவனம் செலுத்தி வருகிறார். காரணம் இந்நிகழ்ச்சி மிகப்பெரிய வெற்றி அடைந்திருப்பதுதான். இந்த டிவி நிகழ்ச்சியில் இறுதிச்சுற்றுக்குத் தேர்வாகியுள்ள 13 போட்டியாளர்களின் பாடும் திறமையால் அவர் மேலும் உற்சாகம் அடைந்திருக்கிறார்.

நிகழ்ச்சியில் பங்கேற்ற இந்திரா தாஸின் குரலைக் கேட்டு உருகிய, சோனாக்ஷி அப்பெண்ணை பாராட்டினார். அப்போது அப்பெண்ணின் தாயார் சோனாக்ஷியின் வீட்டிற்கு ராமாயண் என்று பெயர் வைத்ததன் காரணத்தைச் சொல்லமுடியுமா என்று கேட்டார்.

இந்த கேள்விக்காக முதலில் சிரித்துவிட்ட சோனாக்ஷி பிறகு பொறுப்பாக தனது பதிலை அளித்தார்.

''நிறைய பேர் இதே கேள்வியை என்னிடம் கேட்கிறார்கள். முதன்முறையாக அந்த ரகசியத்தை இங்கே உடைக்கப் போகிறேன். ஒருவகையில் இந்த வீட்டைப் பொறுத்தவரை நான், என் அம்மா இருவரும் வெளியாட்கள் போலத்தான். ஏன் தெரியுமா? இந்த வீட்டில் உள்ள என் தந்தை மற்றும் அவருடைய சகோதரர்கள் அனைவரின் பெயரும் ராம், லக்ஷ்மண், பரத் மற்றும் என் தந்தை சத்ருகன்.

என்னுடைய சகோதரர்கள் பெயர் லவ மற்றும் குசா. ஆக, ராமாயண் என்ற நாங்கள் வசிக்கும் பங்களாவுக்கு பெயர் வைக்கப்பட்டுள்ளதன் காரணம் இப்போது புரிந்திருக்கும். ஆனால் சில சமயங்களில் 'ராமாயண்'ணுக்குள் மகாபாரதத்தின் சாட்சியாக நாங்கள் இருப்போம்....'' - என்று கூற நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் அனைவரும் கைதட்டி ஆரவாரம் செய்தனர்.

பாலிவுட்டின் முக்கிய நடிகரான சத்துருக்கன் சின்ஹாவின் மகள் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in