‘ரூ.1.65 கோடி தருவதாகச் சொன்னார்கள்’ - பிக் பாஸை மறுத்த தனுஸ்ரீ தத்தா

‘ரூ.1.65 கோடி தருவதாகச் சொன்னார்கள்’ - பிக் பாஸை மறுத்த தனுஸ்ரீ தத்தா
Updated on
1 min read

‘பிக் பாஸ்' நிகழ்ச்சியில் பங்கேற்குமாறு தனக்கு 11 வருடமாக அழைப்பு வருவதாகவும் தான் மறுத்துவிட்டேன் என்று நடிகை தனுஸ்ரீ தத்தா தெரிவித்துள்ளார்.

இதுபற்றி அவர் அளித்துள்ள பேட்டியில், “அதுபோன்ற ஒரு வீட்டில் என்னால் தங்க முடியாது. நான் என் குடும்பத்துடன் கூட தங்குவதில்லை. ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியில் பங்கேற்க எனக்கு எப்போதும் ஆர்வம் இருந்ததில்லை. இருக்கவும் இருக்காது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க எனக்கு ரூ.1.65 கோடி தருவதாகச் சொன்னார்கள். என் இடத்துக்கு இன்னொரு நடிகை சென்றார். அவருக்கும் அதே அளவு தொகை வழங்கப்பட்டுள்ளது.

‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியிலிருந்து பேசிய நபர், என் ‘டயட்’டை கவனித்துக் கொள்வதாகவும் சொன்னார். அவர்கள் விலைமதிப்பற்ற ஒன்றைக் கொடுத்தால் கூட நான் வரமாட்டேன் என சொல்லிவிட்டேன். அதில், ஆண்களும் பெண்களும் ஒரே அறையில் தூங்குகிறார்கள்; சண்டையிடுக் கொள்கிறார்கள். என்னால் அதைச் செய்ய முடியாது. என் தனியுரிமை எனக்கு மதிப்புமிக்கது" என்று தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in