தனது பெயர், புகைப்படத்தை பயன்படுத்த தடை கோரி ஐஸ்வர்யா ராய் வழக்கு

தனது பெயர், புகைப்படத்தை பயன்படுத்த தடை கோரி ஐஸ்வர்யா ராய் வழக்கு
Updated on
1 min read

செயற்கை நுண்ணறிவு மூலம் உருவாக்கப்பட்ட தனது புகைப்படங்கள் தவறாகப் பயன்படுத்தப் படுவதாகவும் அதை அனுமதியின்றி பயன்படுத்த தடை விதிக்கக் கோரியும் டெல்லி உயர் நீதிமன்றத்தில் நடிகை ஐஸ்வர்யா ராய் வழக்குத் தொடர்ந்துள்ளார்.

இது தொடர்பாக அவருடைய வழக்கறிஞர் சந்தீப் சேத்தி தாக்கல் செய்த வழக்கில், “மார்பிங் செய்யப்பட்ட ஐஸ்வர்யா ராயின் புகைப்படங்கள் ஆன்லைனில் தவறாகப் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. அவை செயற்கை நுண்ணறிவால் உருவாக்கப்பட்ட புகைப்படங்கள். அவருடைய முகத்தை காபி குவளைகள், வால்பேப்பர்கள், டி-சர்ட்களிலும் பயன்படுத்தி வியாபாரம் செய்கின்றனர். போலியாக உருவாக்கப்பட்ட சில நெருக்கமான புகைப்படங்கள், ஆபாச நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்படுவது துரதிர்ஷ்டவசமானது.

இது அவரது உரிமைகளை மீறும் செயல். அதை செயல்படுத்த உடனடியாக இடைக்காலத் தடை விதிக்க வேண்டும்” என்று கூறியிருந்தார். இதைப் பதிவு செய்து கொண்ட டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி தீஜஸ் காரியா, புகாரில் கூறப்பட்ட 151 இணையதள இணைப்புகளை அகற்றும் நடவடிக்கைகளை மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளார். வழக்கின் அடுத்தக் கட்ட விசாரணை, 2026-ம்ஆண்டு ஜன.15-ல்நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in