’ஒப்பம்’ இந்தி ரீமேக்கின் படப்பிடிப்பு தொடக்கம்

’ஒப்பம்’ இந்தி ரீமேக்கின் படப்பிடிப்பு தொடக்கம்
Updated on
1 min read

அக்‌ஷய் குமார் – சைஃப் அலி கான் நடிக்கும் ‘ஒப்பம்’ இந்தி ரீமேக்கின் படப்பிடிப்பு தொடங்கப்பட்டுள்ளது.

பிரியதர்ஷன் இயக்கும் அடுத்தப் படத்தில் அக்‌ஷய் குமார் மற்றும் சைஃப் அலிகான் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். ’ஹைவான்’ என்ற தலைப்பில் உருவாகும் இதன் படப்பிடிப்பு கொச்சியில் தொடங்கப்பட்டுள்ளது. மும்பை, கொச்சி மற்றும் ஊட்டி ஆகிய இடங்களில் இந்தப் படத்தின் படப்பிடிப்பு நடைபெற இருக்கிறது.

’ஹைவான்’ படத்தில் 17 ஆண்டுகளுக்கு பிறகு அக்‌ஷய் குமார் மற்றும் சைஃப் அலி கான் ஒரே படத்தில் இணைந்துள்ளனர். இப்படத்தினை கே.வி.என் நிறுவனமும், தெஸ்பியன் பிலிம்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரித்து வருகின்றன. இதன் படப்பிடிப்பும் ஒரே கட்டமாக முடித்து, அடுத்த ஆண்டு இறுதியில் வெளியிட முடிவு செய்திருக்கிறார்கள்.

ப்ரியதர்ஷன் இயக்கத்தில் மோகன்லால், சமுத்திரக்கனி, நெடுமுடி வேணு உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘ஒப்பம்’. 2016-ம் ஆண்டு வெளியான இப்படம் பாக்ஸ் ஆபிஸிலும் வரவேற்பைப் பெற்றது. தற்போது இப்படத்தினை தான் ‘ஹைவான்’ என்ற பெயரில் இந்தியில் ரீமேக் செய்கிறார் பிரியதர்ஷன்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in