“பாலிவுட்டில் என்னை தொடர்ந்து புறக்கணித்தனர்” - இயக்குநர் அனுராக் காஷ்யப் வேதனை

“பாலிவுட்டில் என்னை தொடர்ந்து புறக்கணித்தனர்” - இயக்குநர் அனுராக் காஷ்யப் வேதனை
Updated on
1 min read

சென்னை: இந்தி திரைப்படத் துறையில், என்னைத் தொடர்ந்து தவிர்த்தனர். ஏனென்றால் அவர்கள் என்னை ஒரு கெட்ட செய்தியாக நினைக்கிறார்கள் என்று இயக்குநர் அனுராக் காஷ்யப் தெரிவித்துள்ளார்.

சமீபத்திய பேட்டி ஒன்றில் அவர் கூறியதாவது: ““நான் இந்தி படங்கள் பார்ப்பதை நிறுத்திவிட்டேன். நான் முதன்முறையாக மலையாளப் படங்களை நிறையப் பார்க்க ஆரம்பித்தேன். ‘ரைபிள் கிளப்’ படப்பிடிப்பிற்குச் சென்றபோது அது எனக்கு மிகவும் விசித்திரமாக இருந்தது. என் வாழ்க்கையை மாற்றிய அனுபவமாகவும் இருந்தது.

பல இயக்குநர்கள் எனது ‘கென்னடி’ படத்தின் திரையிடலுக்கு வந்தனர். ஆனால் இந்தி திரைப்படத் துறையில், என்னைத் தொடர்ந்து தவிர்த்தனர். ஏனென்றால் அவர்கள் என்னை ஒரு கெட்ட செய்தியாக நினைக்கிறார்கள். அவர்கள் என்னுடன் இணைந்தால், அவர்களுக்கு ஒரு தயாரிப்பு நிறுவனத்தின் ஆதரவு கிடைக்காமல் போகலாம். ஆனால் இங்கே தெற்கில், என் மீது மிகுந்த அன்பு வைத்திருக்கிறார்கள். நாங்கள் உங்களுடைய படங்களைப் பார்த்ததால் பார்த்திருக்கிறோம் என்று சொல்கிறார்கள்.

என்னுடைய குடிப்பழக்கத்தைப் பற்றிப் பேசுகிறார்கள். என்னுடைய மனச்சோர்வைப் பற்றிப் பேசுகிறார்கள். நீங்கள் உங்கள் வழியைத் தவறவிடுகிறீர்கள் என்று சொல்கிறார்கள். அவர்கள் என்னை என்னிடமிருந்து காப்பாற்ற என் மீட்பராக வருகிறார்கள். தென்னகத்தின் இந்த அன்பை எந்த முன்முடிவும் இல்லாமல் நான் உணர்ந்தேன். அது எனது குடிப்பழக்கத்தையோ அல்லது வேறு எதையும் நினைவூட்டுவதில்லை.. நானாகவே குடிப்பதை நிறுத்திவிட்டு எழுதவும் உடற்பயிற்சி செய்யவும் தொடங்கிவிட்டேன்” இவ்வாறு அனுராக் காஷ்யப் தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in