குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவை சந்தித்தார் நடிகர் ஆமிர்கான்!

குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவை சந்தித்தார் நடிகர் ஆமிர்கான்!
Updated on
1 min read

இந்தி நடிகர் ஆமிர்கான் நடித்துள்ள படம் ‘சித்தாரே ஜமீன் பர்’. ஆர். எஸ். பிரசன்னா இயக்கியுள்ள இந்தப்படத்தில் ஜெனிலியா, கோபி கிருஷ்ணன் வர்மா, வேதாந்த் சர்மா, நமஸ் மிஸ்ரா உட்பட பலர் நடித்துள்ளனர். ஜூன் 20-ம் தேதி இந்தப் படம் வெளியானது.

இந்தியில் உருவாகியுள்ள இந்தப் படம், தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் டப் செய்யப்பட்டு வெளியாகி இருக்கிறது. மனவளர்ச்சி குன்றியவர்களுக்குக் கூடைப்பந்து விளையாட்டுப் பயிற்சியாளராக நீதிமன்றத்தால் நியமிக்கப்படும் ஆமிர் கான், எதிர்கொள்ளும் பிரச்சினைகளை உணர்வுப்பூர்வமாகச் சொல்லும் படம் இது.

இந்நிலையில், குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவை, ராஷ்டிரபதி பவனில் நடிகர் ஆமிர்கான் சந்தித்துள்ளார். இது தொடர்பான புகைப்படத்தைக் குடியரசுத் தலைவர் அலுவலகம், சமூக வலைத்தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. சந்திப்புக்கான காரணம் குறித்து தகவல் வெளியிடப்படவில்லை.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in