‘எனக்கு அரிய வகை மூளை நோய் பாதிப்பு’ - சல்மான் கான் அதிர்ச்சி தகவல்

சல்மான் கான்
சல்மான் கான்
Updated on
1 min read

மும்பை: அரிய வகை மூளை நோய் பாதிப்பு மற்றும் நரம்பு மண்டல பாதிப்புடன் தான் போராடி வருவதாக பாலிவுட் சினிமாவின் உச்ச நடிகர்களில் ஒருவரான சல்மான் கான் கூறியுள்ளார். இது அவரது ரசிகர்கள் உட்பட பலரையும் அதிர்ச்சியடைய செய்துள்ளது.

59 வயதான சல்மான் கான், கடந்த 1988-ல் திரைத் துறையில் என்ட்ரி கொடுத்தார். அவரது படங்கள் பல ரசிகர்களை கவர்ந்துள்ளன. அதற்கு காரணமாக கட்டுமஸ்தான அவரது உடல்வாகு மற்றும் மேனரிஸம், உடல் மொழி உள்ளிட்டவற்றை சொல்லலாம். இன்னும் திருமணம் செய்து கொள்ளாமல் சிங்கிளாக வாழ்ந்து வருகிறார்.

கடந்த 2011-ல் முகத்தில் நரம்பு ரீதியான பாதிப்பு இருப்பதாக தெரிவித்தார். அதற்காக அப்போது அறுவை சிகிச்சையும் செய்து கொண்டார். இந்நிலையில், தற்போது அவருக்கு மேலும் இரண்டு பாதிப்புகள் இருப்பதாக தெரிவித்துள்ளார்.

இந்த அரிய வகை பாதிப்பு அவரது மூளையின் ரத்த நாளம் மற்றும் ஏவிஎம் நரம்பு மண்டலத்தில் இருப்பதாக கூறியுள்ளார். நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற சல்மான் கானிடம் திருமணம் செய்து கொள்ளாதது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது தனது உடல்நிலை குறித்து அவர் பகிர்ந்து கொண்டபோது இது தெரியவந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in