‘காதலிக்கப்படுவது அழகானது’ - ஹினா கான் உருக்கம்

‘காதலிக்கப்படுவது அழகானது’ - ஹினா கான் உருக்கம்

Published on

இந்தி நடிகை ஹினா கான், ‘நாகினி’ டி.வி.தொடரில் நடித்ததன் மூலம் மற்ற மொழிகளிலும் பிரபலமானார். இவர், புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்தார். “எனக்கு மூன்றாம் நிலை மார்பகப் புற்றுநோய் இருக்கிறது. இந்த நோயை வெல்வேன் என்று நம்புகிறேன். சிகிச்சை தொடங்கி விட்டது. எனக்காகப் பிரார்த்தனை செய்யுங்கள்” என்று சில மாதங்களுக்கு முன் உருக்கமாகக் கேட்டுக்கொண்டிருந்தார்.

இந்நிலையில் தனது காதலரான, டி.வி.தொடர் தயாரிப்பாளர் ராக்கி ஜெய்ஷ்வால் என்பவரைத் திருமணம் செய்துள்ளார். இருவரும் 13 வருடமாக காதலித்து வந்தனர்.

இந்நிலையில் தன்னை ஏற்றுக்கொண்டதற்காக கணவருக்கு நன்றி தெரிவித்துள்ள ஹினா கான், “காதலிக்கப்படுவது எப்போதும் அழகானது. ஆனால் எனக்கு நாளை என்ன நடக்கும் என்பது தெரியாத நிலையில், ஒரு பெண்ணை அரவணைப்பதும், ஏற்றுக்கொள்வதும் பெரிய ஆசிர்வாதம்” என்று உருக்கமாகக் கூறியுள்ளார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in