

காலா புகழ் நடிகை ஹூமா குரேஷி, "இந்தியாஸ் பெஸ்ட் ட்ரீம்பஸ்" என்ற குழந்தைகளுக்கான ரியாலிட்டி நிகழ்ச்சியில் பங்கேற்க ஒப்புக்கொண்டுள்ளார்.
சமீபத்தில் வெளியான காலா நாயகி ஹூமா குரேஷி தொலைக்காட்சியின் குழந்தைகளுக்கான டாக் ஷோ ஒன்றில் வழிகாட்டியாக தோன்ற ஒப்புக்கொண்டுள்ளார்.
ஸீ தொலைக்காட்சி நடத்திவரும் இந்தியாஸ் பெஸ்ட் ட்ரீம்பஸ் என்ற ரியாலிட்டி ஷோ 2016லிருந்து வெற்றிகரமாக நடைபெற்றுவருவம் ஒரு நிகழ்ச்சியாகும்.
இதில் மூன்றாவது செஷனில் விவேக் ஓபராய் மற்றும் திரைப்பட தயாரிப்பாளர் ஓம்ங் குமார் ஆகியோருடன் இணைந்து வழிகாட்டியாக அவர் பங்கேற்கிறார்.
இதுகுறித்து ஹுமா குரேஷி தெரிவிக்கையில், ‘‘குழந்தைகளுக்கான இத்தகைய பிளாட்பாரங்கள் நம்பமுடியாத அளவுக்கு ஊக்கமளிக்கின்றன. இளங்குழந்தைகள் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தவும் அவர்கள் முன்னேறவும் உதவுகின்றன இந்த அற்புதமான நிகழ்ச்சியில் அவர்களுடன் நிகழ்ச்சியில் தோன்றுவது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது’’ என்றார்.
ஹுமா குரேஷி 2012ல் திரையுலகில் அடியெடுத்துவைத்து ஏராளமான பாலிவுட் படங்களில் நடித்திருந்தாலும் காலா படத்தில் ரஜினியின் இன்னொரு நாயகியாக நடித்த பிறகே தமிழ் திரையுலகிற்கு இவர் அறிமுகமானார்.
71 வது கேன்ஸ் திரைப்படவிழாவில் கலந்து கொண்டு திரையுலகில் பெண்கள் பாலியல் சுரண்டலுக்கு ஆளாக்கப்படுவதாக இவர் பேசியது பரபரப்பை ஏற்படுத்திய குறிப்பிடத்தக்கது.