சினிமாவாகிறது குரு தத் வாழ்க்கை கதை!

சினிமாவாகிறது குரு தத் வாழ்க்கை கதை!
Updated on
1 min read

மறைந்த இந்திப் பட இயக்குநரும் நடிகருமான குரு தத்தின் வாழ்க்கை கதை திரைப்படமாகிறது.

இந்திய சினிமாவின் முன்னணி ஆளுமையான குருதத், 1950 மற்றும் 60- களில், பியாஸா, காகஸ் கே பூல், சாஹிப் பீபி அவுர் குலாம் உள்பட எட்டு திரைப்படங்களை இயக்கியுள்ளார். அமெரிக்காவின் டைம் இதழ் வெளியிட்ட, எல்லா காலத்துக்குமான சிறந்த 100 படங்களின் பட்டியலில் இவரின் ‘பியாசா’, ‘காகஸ் கே பூல்’ படங்கள் இடம்பெற்றன.

அவரின் வாழ்க்கை கதையை மையமாக வைத்து சினிமா உருவாகிறது. அல்ட்ரா மீடியா நிறுவனத்தின் ரஜத் அகர்வால் இதைத் தயாரிக்க இருக்கிறார். இதற்காக இரண்டு இயக்குநர்களிடம் பேசி வருவதாகவும் குருதத் கதாபாத்திரத்தில் விக்கி கவுசல் நடித்தால் நன்றாக இருக்கும் என்று நினைப்பதாகவும் ரஜத் அகர்வால் தெரிவித்துள்ளார். இதுகுறித்து விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று கூறப்படுகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in