பிருத்விராஜ் இயக்கத்தில் ஹ்ரித்திக் ரோஷன்?

பிருத்விராஜ் இயக்கத்தில் ஹ்ரித்திக் ரோஷன்?
Updated on
1 min read

பிருத்விராஜ் இயக்கத்தில் ஹ்ரித்திக் ரோஷன் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஹொம்பாலே நிறுவனம் தயாரிக்கும் புதிய படம் ஒன்றில் நாயகனாக நடிக்க ஹ்ரித்திக் ரோஷன் ஒப்பந்தமாகி இருக்கிறார். இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஆனால், அதன் இயக்குநர் யார் என்பதை தயாரிப்பு நிறுவனம் தெரிவிக்கவில்லை. தற்போது இதன் இயக்குநர் பிருத்விராஜ் தான் என தகவல் வெளியாகியுள்ளது.

‘சலார்’ படத்தில் நடித்ததன் மூலம் ஹொம்பாலே நிறுவனத்துடன் பிரித்விராஜுக்கு நல்ல நட்பு ஏற்பட்டுள்ளது. சில மாதங்களுக்கு முன்பு ஹொம்பாலே நிறுவனம் படம் ஒன்றை பிருத்விராஜ் இயக்கவிருப்பதாக செய்திகள் வெளியாகி இருந்தன. தற்போது அப்படத்தில் தான் ஹ்ரித்திக் ரோஷன் நாயகனாக நடிக்கவுள்ளார் என கூறப்படுகிறது.

‘லூசிஃபர்’ படத்தின் வெற்றிக்குப் பின், ராஜமவுலி இயக்கி வரும் படத்தில் நடித்து வருகிறார் பிருத்விராஜ். அதனைத் தொடர்ந்து ஹ்ரித்திக் ரோஷன் படத்தின் பணிகளைத் தொடங்குவார் எனத் தெரிகிறது. ஆனால், இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்க அடுத்த ஆண்டு இறுதியாகும் எனக் கூறப்படுகிறது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in