மகேஷ் நாராயணன் இயக்கத்தில் சல்மான் கான்?

மகேஷ் நாராயணன் இயக்கத்தில் சல்மான் கான்?
Updated on
1 min read

மகேஷ் நாராயணன் இயக்கத்தில் சல்மான் கான் நடிக்க புதிய படம் ஒன்றுக்கு பேச்சுவார்த்தை தொடங்கப்பட்டுள்ளது.

மலையாளத்தில் ‘டேக் ஆஃப்’, ‘மாலிக்’ உள்ளிட்ட வரவேற்பைப் பெற்ற படங்களை இயக்கியவர் மகேஷ் நாராயணன். தற்போது மம்முட்டி, மோகன்லால், ஃபகத் பாசில் உள்ளிட்ட பலர் நடிக்கும் படத்தினை இயக்கி வருகிறார். இதனைத் தொடர்ந்து சல்மான் கான் நடிக்கும் புதிய படத்தை இயக்க பேச்சுவார்த்தை தொடங்கி இருக்கிறார்.

மும்பையில் சல்மான்கான் – மகேஷ் நாராயணன் முதற்கட்ட சந்திப்பு நடைபெற்றுள்ளது. வரும் மாதங்களில் மீண்டும் இருவரும் சந்தித்து முழுக்கதை விவாதம் நடைபெற இருக்கிறது. அந்தச் சந்திப்பு முடிந்தவுடன் இருவரும் இணைவார்களா என்பது தெரியவரும்.

இப்படத்தை சல்மான்கானின் சகோதரி அல்விரா கான் மற்றும் அவரது கணவர் இணைந்து தயாரிக்க திட்டமிட்டு இருக்கிறார்கள். சல்ம்கான் கான் – மகேஷ் நாராயணன் இணையும் படம் சண்டைக் காட்சிகள் நிறைந்த ஆக்‌ஷன் படமாக இருக்கும் என்று செய்திகள் வெளியாகி இருக்கின்றன.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in