‘ஸ்பிரிட்’ நாயகியாக திரிப்தி டிம்ரி ஒப்பந்தம்!

‘ஸ்பிரிட்’ நாயகியாக திரிப்தி டிம்ரி ஒப்பந்தம்!
Updated on
1 min read

‘ஸ்பிரிட்’ நாயகியாக திரிப்தி டிம்ரி ஒப்பந்தம் செய்யப்பட்டு இருப்பதாக இயக்குநர் சந்தீப் ரெட்டி வாங்கா தெரிவித்துள்ளார்.

சந்தீப் ரெட்டி வாங்கா இயக்கத்தில் பிரபாஸ் நடிப்பில் உருவாகவுள்ள படம் ‘ஸ்பிரிட்’. இதன் முதற்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. விரைவில் படப்பிடிப்பு துவங்குவதற்காக நடிகர்கள் ஒப்பந்தமும் நடைபெற்று வருகிறது. முதலில், பிரபாஸுக்கு நாயகியாக தீபிகா படுகோன் ஒப்பந்தமானார்.

பின்பு படப்பிடிப்புக்கான அவருடைய நிபந்தனைகளால் இயக்குநருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் தீபிகா படுகோன் விலகவே, தற்போது நாயகியாக திரிப்தி டிம்ரி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இவர் தான் ‘அனிமல்’ படத்தில் 2-வது நாயகியாக நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. செப்டம்பரில் படப்பிடிப்பு தொடங்க படக்குழு திட்டமிட்டு இருக்கிறது. ஒரே கட்டமாக படப்பிடிப்பை முடிக்கவும் முடிவு செய்திருக்கிறார்கள்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in