வரவேற்பைப் பெற்ற வார் 2 டீஸர்: ரசிகர்களுக்கு ஜூனியர் என்.டி.ஆர் நன்றி

வரவேற்பைப் பெற்ற வார் 2 டீஸர்: ரசிகர்களுக்கு ஜூனியர் என்.டி.ஆர் நன்றி
Updated on
1 min read

நடிகர் ஜூனியர் என்.டி.ஆர், இந்தியில் அறிமுகமாகும் படம் ‘வார் 2’. யாஷ் ராஜ் பிலிம்ஸின் ஸ்பை யுனிவர்ஸ் பட வரிசையின் 6-வது படமான இதில், ஹிருத்திக் ரோஷன், கியாரா அத்வானி உள்பட பலர் நடித்துள்ளனர்.

அயன் முகர்ஜி இயக்கியுள்ள இந்த பிரம்மாண்ட ஆக்‌ஷன் படத்தின் டீஸர், ஜுனியர் என்.டி.ஆரின் பிறந்த நாளை முன்னிட்டு நேற்று முன் தினம் வெளியானது. வெளியான சில மணி நேரங்களிலேயே அதிகமான பார்வைகளைப் பெற்றது. சிலிரிக்க வைக்கும் ஆக்‌ஷன் காட்சிகள் இடம்பெற்றுள்ள இந்த டீஸருக்கு கிடைத்துள்ள வரவேற்புக்காக ரசிகர்களுக்கு ஜூனியர் என்.டி.ஆர் நன்றி தெரிவித்துள்ளார்.

இதுபற்றி அவர், “சில நேரங்களில் எனது இந்த திரைப்பயணத்தை இடைநிறுத்தி திரும்பிப் பார்ப்பேன். ஒவ்வொரு முறையும், முதலில் நினைவுக்கு வருவது ரசிகர்களாகிய நீங்கள்தான். ‘வார் 2’ டீஸருக்குக் கிடைத்த வரவேற்பு நம்ப முடியாததாக இருக்கிறது. ஆக.14-ல் அந்தப் படத்தை நீங்கள் பார்ப்பதற்காக ஆவலுடன் காத்திருக்கிறேன். உங்கள் அன்பான வாழ்த்துகளுக்கு நன்றி” என்று தெரிவித்துள்ளார்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in