உலகின் பணக்கார நடிகர்கள் பட்டியல்: ஷாருக்கான் 4-வது இடம்!

உலகின் பணக்கார நடிகர்கள் பட்டியல்: ஷாருக்கான் 4-வது இடம்!
Updated on
1 min read

உலக அளவில் பணக்கார நடிகர்களின் பட்டியலில் நடிகர் ஷாருக்கான் நான்காவது இடம் பிடித்துள்ளார். எஸ்கொயர் இதழ் வெளியிட்டுள்ள இந்தப் பட்டியலில் ஹாலிவுட் நடிகர் அர்னால்டு 1.49 பில்லியன் டாலர்கள் சொத்து மதிப்புடன் முதலிடத்தில் உள்ளார். இரண்டாம் இடத்தில் 1.19 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் தி ராக் டுவைன் ஜான்சன், மூன்றாம் இடத்தில் 891 மில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் டாம் க்ரூஸும் உள்ளனர்.

இவர்களுக்கு அடுத்தபடியாக ஷாருக்கான் 876.5 மில்லியன் டாலர்கள் சொத்து மதிப்புடன் நான்காம் இடத்தில் உள்ளார். ஜார்ஜ் க்ளூனி 742.8 மில்லியன் டாலர்களுடன் ஐந்தாவது இடத்தைப் பிடித்துள்ளார். 2025 ஆம் ஆண்டின் முதல் 10 பணக்கார நடிகர்களின் பட்டியலில் ராபர்ட் டி நீரோ, ஜாக் நிக்கல்சன் மற்றும் ஜாக்கி சான் போன்ற பிற ஜாம்பவான்களும் இடம்பெற்றுள்ளனர்.

இந்தியாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருக்கும் ஷாருக்கான் மட்டுமே இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளார். அவர் நடித்த ’பதான்’, ‘ஜவான்’ இரண்டு படங்களுமே ஒரே ஆண்டில் ரூ.1000 கோடிக்கு மேல் வசூலித்தது குறிப்பிடத்தக்கது. அடுத்து சுஜாய் கோஷ் இயக்கத்தில் ‘கிங்’ என்ற திரைப்படத்தில் ஷாருக்கான் நடித்து வருகிறார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in