

பிரபல கிரிக்கெட் வீரர் கபில் தேவ் வேடத்தில் ரன்வீர் சிங் நடிக்க இருக்கிறார்.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ்.தோனியின் வாழ்க்கை வரலாறு, ‘எம்.எஸ்.தோனி: த அன்டோல்டு ஸ்டோரி’ என்ற பெயரில் படமாக வெளியானது. தோனி பற்றி யாருக்கும் தெரியாத விஷயங்கள் அந்தப் படத்தில் சொல்லப்பட்டிருந்தன.
250 கோடி ரூபாய்க்கு மேல் அந்தப் படம் வசூலித்து மிகப்பெரிய வெற்றி பெற்றது. எனவே, அந்தப் படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க தற்போது முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 2011-ம் ஆண்டு உலகக் கோப்பையை வென்றதற்குப் பின்னான தோனியின் வாழ்க்கை மற்றும் அவருடைய சொந்த வாழ்க்கை போன்றவை இரண்டாம் பாகத்தில் இடம்பெறுகின்றன.
இந்நிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவின் வாழ்க்கை வரலாறும் படமாக இருக்கிறது. 1983-ம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியை அடிப்படையாக வைத்து இந்தப் படம் உருவாக இருக்கிறது.
கபிர் கான் இயக்கும் இந்தப் படத்தில், கபில் தேவ் வேடத்தில் ரன்வீர் சிங் நடிக்கிறார். அவருடைய பயிற்சியாளராக நவாஸுதீன் சித்திக் நடிக்கிறார். அடுத்த வருடம் (2019) ஆகஸ்ட் மாதம் படத்தை வெளியிடத் திட்டமிட்டுள்ளனர்.
“எப்போதுமே அப்பா தான் சாக்லேட் பாய்” - கவுதம் கார்த்திக்