இந்தியில் மீண்டும் கீர்த்தி சுரேஷ்!

இந்தியில் மீண்டும் கீர்த்தி சுரேஷ்!

Published on

தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக இருந்து வருபவர் நடிகை கீர்த்தி சுரேஷ். இவரது நடிப்பில் தமிழில் கடைசியாக ‘ரகு தாத்தா’ என்ற படம் வெளியானது. அதையடுத்து, ‘ரிவால்வர் ரீட்டா’ உட்பட சில படங்கள் வெளியாக இருக்கின்றன.

இதற்கிடையில் ‘தெறி’ படத்தின் இந்தி ரீமேக்கான ‘பேபி ஜான்’ படத்தில் நடித்தார். இந்தப் படம் பெரிய வரவேற்பைப் பெறவில்லை. இந்நிலையில் மேலும் ஒரு இந்தி படத்தில் அவர் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். ரொமான்டிக் காமெடி படமான இதன் இயக்குநர் உள்ளிட்ட விவரங்கள் விரைவில் வெளியிடப்படும் என்று தெரிகிறது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in