“3 வாரங்கள் மன அழுத்தத்தில் இருந்தேன்” - ‘லால் சிங் சத்தா’ தோல்வி குறித்து ஆமிர் கான்

“3 வாரங்கள் மன அழுத்தத்தில் இருந்தேன்” - ‘லால் சிங் சத்தா’ தோல்வி குறித்து ஆமிர் கான்
Updated on
1 min read

மும்பை: என் படம் தோல்வியடையும்போது, நான் இரண்டு அல்லது மூன்று வாரங்களுக்கு மன அழுத்தத்துக்குள் சென்று விடுவேன். அதன் பிறகு நான் என்னுடைய குழுவினருடன் அமர்ந்து என்ன தவறு நடந்தது என்று விவாதித்து அதிலிருந்து கற்றுக் கொள்வேன் என்று நடிகர் ஆமிர் கான் தெரிவித்தார்.

இதுகுறித்து தனியார் ஊடக நிகழ்வு ஒன்றில் பேசிய ஆமிர்கான், “என்னுடைய படங்கள் தோல்வி அடைந்தால் நான் வருத்தம் அடைவேன். காரணம் ஒரு படத்தை எடுப்பது கடினமானது. சில நேரம் நாம் திட்டமிட்டது போல் எதுவும் நடப்பதில்லை. ‘லால் சிங் சத்தா’ படத்தில் என்னுடைய நடிப்பு சற்று மிகையாக இருந்தது. அந்த படம் முழுக்க ஹீரோவின் நடிப்பை சார்ந்த ஒரு படம். டாம் ஹாங்க்ஸின் ‘ஃபார்ரஸ்ட் கம்ப்’ படத்தை போல அது வரவேற்பை பெறவில்லை.

என் படம் தோல்வியடையும்போது, நான் இரண்டு அல்லது மூன்று வாரங்களுக்கு மன அழுத்தத்துக்குள் சென்று விடுவேன். அதன் பிறகு நான் என்னுடைய குழுவினருடன் அமர்ந்து என்ன தவறு நடந்தது என்று விவாதித்து அதிலிருந்து கற்றுக் கொள்வேன். எனது தோல்விகளை நான் உண்மையிலேயே மதிக்கிறேன். அவைதான் நான் இன்னும் சிறப்பாக செயல்பட தூண்டுகின்றன” இவ்வாறு ஆமிர் கான் தெரிவித்தார்.

ஹாலிவுட்டில் வெளியான 'ஃபாரஸ்ட் கம்ப்' படத்தின் இந்தி ரீமேக் ‘லால் சிங் சத்தா’. பெரும் பொருட்செலவில் உருவான இப்படத்தில் ஆமிர்கான், கரீனா கபூர் நடித்திருந்தனர். 2022ல் வெளியான இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது மட்டுமின்றி பாக்ஸ் ஆபீஸிலும் பெரும் தோல்வியை தழுவியது. அதன்பிறகு ஆமிர்கான் எந்த படத்திலும் கமிட் ஆகாமல் இருந்து வருகிறார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in