

இந்தி திரைப்பட இசை அமைப்பாளர் ப்ரீதம் சக்ரவர்த்தி. பாலிவுட்டில் பல சூப்பர் ஹிட் பாடல்களைக் கொடுத்துள்ள இவரது ஸ்டூடியோ, மும்பை கோரேகான்-முலுண்ட் இணைப்புச் சாலை அருகே உள்ளது. இங்கு ஆசிஷ் சயல் (32) என்பவர் உதவியாளராகப் பணியாற்றி வந்தார்.
ப்ரீதம் சக்ரவர்த்திக்கு, தயாரிப்பாளர் மது மண்டேலா, தனது படத்தின் பணிக்காக ரூ.40 லட்சம் கொடுத்திருந்தார். பணம் இருந்த பை, அலுவலக டிராயரில் இருந்தது.
அவர் மானேஜர் வெளியில் சென்று வருவதற்குள் பணத்தை எடுத்துக்கொண்டு ஆசிஷ் சயல் தலைமறைவானார். அவரது செல்போன் அணைத்து வைக்கப்பட்டுள்ளது. மலாடு போலீஸில் புகார் அளித்ததை அடுத்து அவர்கள் விசாரித்து வருகின்றனர்.