நடிகர் சோனு சூட்டுக்கு பிடிவாரண்ட்

நடிகர் சோனு சூட்டுக்கு பிடிவாரண்ட்
Updated on
1 min read

நடிகர் சோனுசூட், தமிழ், தெலுங்கு, இந்தி படங்களில் நடித்து வருகிறார். இவர் மீது பஞ்சாப்மாநிலம் லூதியானாவைச் சேர்ந்த வழக்கறிஞர் ராஜேஷ் கன்னா என்பவர், ரூ.10 லட்சம் மோசடி செய்ததாக வழக்குத் தொடர்ந்திருந்தார். அதில் ‘மோஹித் சுக்லா என்பவர் போலியாக ரிஜிகா நாணயங்களில் முதலீடு செய்தால் இரட்டிப்பு லாபம் கிடைக்கும் என்றார். இந்நிறுவன விளம்பர தூதராக நடிகர் சோனு சூட் இருந்தார். அவரது விளம்பரத்தைப் பார்த்துதான் பணத்தை இழந்தேன். இவ்வழக்கின் முக்கிய சாட்சியாக அவர் சேர்க்கப்பட்டுள்ளார். அவரை விசாரிக்க வேண்டும்’ என்று கூறியிருந்தார்.

இதனால் நீதிமன்றம் பல முறை சம்மன் அனுப்பியும் சோனு சூட் ஆஜராகவில்லை. அதனால் அவருக்கு எதிராக லூதியானா நீதிமன்றம் கைது வாரண்ட் பிறப்பித்துள்ளது. அதில், மும்பை அந்தேரி மேற்கு பகுதியில் உள்ள ஓஷிவாரா காவல் நிலைய அதிகாரிக்கு சோனு சூட்டை கைது செய்ய உத்தரவிட்டது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in