

நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரபாஸ் ஹீரோவாக நடித்த படம், ‘கல்கி 2898 ஏடி’. அறிவியல் புனைகதையைக் கொண்ட படமான இதில் அமிதாப் பச்சன், கமல்ஹாசன், தீபிகா படுகோன், திஷா பதானி என பலர் நடித்தனர்.
சந்தோஷ் நாராயணன் இசை அமைத்த இந்தப் படம் கடந்த ஆண்டு ஜூன் மாதம் வெளியானது. இதன் அடுத்த பாகம் விரைவில் உருவாகும் என்று கூறப்பட்டது. இந்நிலையில் அடுத்த பாகத்தின் படப்பிடிப்பு எப்போது தொடங்கும் என்று இயக்குநர் நாக் அஸ்வின் தெரிவித்துள்ளார்.
ஸ்கிரிப்ட் உட்பட அனைத்தும் தயாராக இருப்பதாகவும் கமல்ஹாசன், அமிதாப்பச்சன், தீபிகா படுகோன், பிரபாஸ் ஆகியோரின் கால்ஷீட் மொத்தமாகத் தேவைப்படுவதால் அதற்காகக் காத்திருப்பதாகவும் கூறியுள்ளார். இந்த வருடம் மே மாதம் தொடங்கி அடுத்த வருட இறுதிக்குள் படம் வெளியாகும் என்று நம்புவதாகவும் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, இந்தப் படத்தின் தயாரிப்பாளர்களான ஸ்வப்னா தத், பிரியங்கா தத் ஆகியோர் கூறும்போது, இந்த ஜனவரி அல்லது பிப்ரவரியில் படப்பிடிப்பை தொடங்க இருப்பதாகக் கூறியிருந்தனர். இப்போது அது தள்ளிப் போயிருக்கிறது.