

அட்லீ தயாரிப்பில் வெளியான ‘பேபி ஜான்’ தோல்வி குறித்து ராஜ்பால் யாதவ் பதிலளித்துள்ளார்.
டிசம்பர் 25-ம் தேதி இந்தியில் அட்லீ தயாரிப்பில் வெளியான படம் ’பேபி ஜான்’. பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே வெளியான இப்படம் படுதோல்வியை தழுவியது. இப்படத்தில் வருண் தவானுடன் வரும் காவல்துறை அதிகாரியாக நடித்திருந்தார் ராஜ்பால் யாதவ். சமீபத்தில் அளித்த பேட்டியில் ‘பேபி ஜான்’ தோல்விக்கான காரணம் குறித்து பேசியிருக்கிறார்.
அதில் ராஜ்பால் யாதவ், “அனைத்து விதத்திலும் நல்ல முறையில் எடுக்கப்பட்ட படம் தான் ‘பேபி ஜான்’. ஆனால், தமிழில் பெரும் வரவேற்பைப் பெற்ற ‘தெறி’ படம் ரீமேக் என்பது தான் பலனளிக்கவில்லை. ஏற்கெனவே விஜய் நடித்த படத்தினை மக்கள் பார்த்துவிட்டார்கள். அது தான் ‘பேபி ஜான்’ வசூலைப் பாதித்துவிட்டது” என்று தெரிவித்துள்ளார்.
அட்லீ தயாரிப்பில் வருண் தவான், கீர்த்தி சுரேஷ், வாமிகா, ஜாக்கி ஷெராஃப், ராஜ்பால் யாதவ் உள்ளிட்ட பலர் நடித்திருந்த படம் ‘பேபி ஜான்’. இதனை அவரது உதவியாளர் காளீஸ் இயக்கியிருந்தார். இதன் தோல்வி குறித்து படக்குழுவினர் சார்பில் யாருமே பேசவில்லை. முதன்முறையாக ராஜ்பால் யாதவ் தான் பேசியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.