

நடிகர் ரஜினிகாந்தை லிங்கா படப்பிடிப்பில் சந்தித்துள்ளார் பாலிவுட் இயக்குநர் ரோஹித் ஷெட்டி.
கோல்மால் 2, சிங்கம் ரிட்டர்ன்ஸ், சென்னை எக்ஸ்பிரஸ், சிங்கம், போன்ற சூப்பர் ஹிட் படங்களை இயக்கியவர் ரோஹித் ஷெட்டி. இவரது திரைப்படங்கள் 100 கோடி வசூலைத் தாண்டுவது அசாதாரணம்.
ஏராளமான பாலிவுட் நடிகர்களுக்கு ரோஹித் ஷெட்டியின் இயக்கத்தில் நடிக்க வேண்டுமென்று ஆர்வம் இருக்கும் நிலையில், அவர் தற்போது ரஜினிகாந்தை சந்தித்துள்ளார். சந்திப்பிற்கு பிறகு ரோஹித் ஷெட்டி கூறியதாவது:
“சமீபத்தில் எனக்கு ரஜினி அவர்களை ஹைதராபாத்தில் சந்திக்க ஒரு சந்தர்ப்பம் ஏற்பட்டது. எனது வருகையை அறிந்த அவர், என்னிடம் வந்து,’ரோஹித், உங்களது அனைத்துப் படைப்புகளையும் எனக்கு மிகவும் பிடிக்கும், நான் உங்களது பெரிய ரசிகர்’ என்றார். நான் என்னயே மறந்துவிட்டேன். ரஜினி சார் என்னைப் பொருத்தவரையில் ஒரு அகில உலக நட்சத்திரம். அவ்வளவு தன்மையாக நடந்துக்கொண்டார். நான் அவருடன் அரைமணி நேரம் இருந்தேன். அவர் முன்னிலையில் நான் மிகச்சிறியவன். ஆனாலும்கூட என்னை சிறப்பாக நினைக்கவைத்தார் ” என்று நெகிழ்வோடு ரோஹித் ஷெட்டி கூறியுள்ளார்.
’லிங்கா ‘ படத்தில் ரஜினியினுடைய கதாப்பாத்திரத்தை வெளிப்படுத்திவிடும் என்பதால், ரோஹித் ஷெட்டி ரஜினிகாந்துடன் எடுத்த புகைப்படத்தை இயக்குநர் கே.எஸ், ரவிகுமார் வெளியிடக்கூடதென்று கூறியுள்ளார். ரஜினியுடன் பணியாற்ற சந்தர்ப்பம் அமைந்தால், இரு மொழிகளிலும் படம் எடுப்பேன் என்று ரோஹித் ஷெட்டி குறிப்பிட்டுள்ளார்.