

நேரடி இந்திப் படத்தில் நடிக்கவிருப்பதை பேட்டியொன்றில் உறுதிப்படுத்தி இருக்கிறார் சூர்யா.
இந்திப் படத்தில் நடிக்க உள்ளதை பேட்டியொன்றில் உறுதிப்படுத்தி இருக்கிறார் சூர்யா. அதில் “சில பேச்சுவார்த்தைகள் சென்றுக் கொண்டிருக்கிறது. ஒரு படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் முன்பு பல விஷயங்கள் முடிவாக வேண்டியதுள்ளது.
இப்பணிகள் எல்லாம் ஓராண்டுக்கு முன்பே தொடங்கி நடைபெற்று வருகின்றன. அதுவே எனது முதல் படமாக இருக்கும். அதை இங்கு தெரிவிக்க சரியான தருணம் அல்ல. அதை தயாரிப்பாளர்கள் அறிவித்தால் மட்டுமே சரியாக இருக்கும்” என்று தெரிவித்துள்ளார் சூர்யா.
ராகேஷ் ஓம்பிரகாஷ் மெஹ்ரா இயக்கத்தில் உருவாகவுள்ள ‘கர்ணா’ படத்தில் சூர்யா நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகின. மும்பையில் சூர்யா - ராகேஷ் ஓம்பிரகாஷ் மெஹ்ரா இருவரும் சந்தித்த புகைப்படங்கள், வீடியோக்கள் இணையத்தில் வெளியாகின. ஆனால் அவர்கள் இருவரும் இணைவது குறித்து அதிகாரபூர்வமாக எதுவுமே அறிவிக்கப்படாமல் இருப்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், ‘தூம் 4’ படத்தின் வில்லனாக சூர்யா நடிக்கவுள்ளதாகவும் செய்திகள் வெளியாகி இருப்பது நினைவுகூரத்தக்கது.