அயோத்தியில் உள்ள குரங்குகளுக்காக நடிகர் அக்‌ஷய்குமார் ரூ.1 கோடி நன்கொடை

அயோத்தியில் உள்ள குரங்குகளுக்காக நடிகர் அக்‌ஷய்குமார் ரூ.1 கோடி நன்கொடை
Updated on
1 min read

அயோத்தியில் கடந்த ஜனவரி மாதம் ராமர் கோயில் திறக்கப்பட்டது. அங்கு தினமும் இந்தியா முழுவதும் இருந்து பக்தர்கள் வருகின்றனர். அந்தப் பகுதியில் ஏராளமான குரங்குகளும் உள்ளன. உணவு இல்லாததால் அவை அங்கு செல்லும் பக்தர்களுக்குத் தொல்லை கொடுத்துவந்தன.

இதையடுத்து ஆஞ்சநேய சேவா என்ற அறக்கட்டளை குரங்களுக்கு உணவளித்து வருகிறது. பக்தர்களுக்கு குரங்குகளால் சிரமம் ஏற்படாமல் பார்த்துக்கொள்ளும் முயற்சியையும் செய்து வருகிறது. இந்த அறக்கட்டளைக்கு நடிகர் அக்‌ஷய் குமார் ரூ.1 கோடிநன்கொடை அளித்துள்ளார். தனது பெற்றோர் மற்றும் தனது மாமனாரும் நடிகருமான ராஜேஷ் கன்னா பெயரில் அவர் வழங்கியுள்ளார்.

ஆஞ்சநேய சேவா அறக்கட்டளையின் நிறுவனர் - அறங்காவலர் பிரியா குப்தா கூறும்போது, “அயோத்தியில் குரங்குகளுக்கு உணவளிக்கும்போது யாருக்கும் சிரமம் ஏற்படாமல் இருப்பதையும் குப்பைகள் இன்றி தெருக்களைச் சுத்தமாக வைப்பதையும் உறுதி செய்வோம்” என்று தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in