கணவரை பிரிகிறார் ஊர்மிளா மடோன்கர்

கணவரை பிரிகிறார் ஊர்மிளா மடோன்கர்
Updated on
1 min read

பிரபல இந்தி நடிகையான ஊர்மிளா மடோன்கர், தமிழ், தெலுங்கு, மலையாளப் படங்களில் நடித்துள்ளார். இந்தியில் இவர் நடித்த ‘ரங்கீலா’ சூப்பர் ஹிட்டானது. தமிழில் கமல்ஹாசனுடன் இந்தியன், சாணக்கியன் படங்களில் நடித்துள்ளார். மும்பையைச் சேர்ந்த இவர் தொழிலதிபரும் மாடலுமான மோசின் அக்தர் என்பவரை காதலித்துக் கடந்த 2016-ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். ஊர்மிளாவை விட மோசின் 10 வயது இளையவர்.

அரசியல் ஆர்வம் கொண்ட ஊர்மிளா, கடந்த 2019-ம் ஆண்டு காங்கிரஸ் கட்சியில் இணைந்து, மும்பை வடக்கு மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டுத் தோல்வியடைந்தார். பின்னர் அக்கட்சியில் இருந்து விலகி, சிவசேனாவில் இணைந்தார். இந்நிலையில் இவர் தனது கணவரிடம் இருந்து விவாகரத்து கோரி மும்பை பாந்த்ரா குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தக்கல் செய்துள்ளார். 4 மாதத்துக்கு முன்பே அவர் மனு தாக்கல் செய்துவிட்டதாகவும் இருவரும் ஒருமித்த மனதுடன் விவாகரத்து மனு தாக்கல் செய்யவில்லை என்றும் கூறப்படுகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in