

‘தூம்’ படத்தின் நான்காம் பாகத்தில் சல்மான் கான் நடிக்க இருப்பதாகப் பாலிவுட் மீடியாக்கள் கிசுகிசுக்கின்றன.
பாலிவுட் சீரிஸ் படங்களில், ‘தூம்’ படத்துக்கு முக்கியப் பங்குண்டு. பாலிவுட் மட்டுமின்றி, பிறமொழி சினிமா ரசிகர்களுக்கும் இந்தப் படம் ரொம்பவே பிடிக்கும். ஆதித்யா சோப்ரா தயாரிக்கும் இந்தப் படத்தின் முதல் இரண்டு பாகங்களை சஞ்சய் காத்வியும், மூன்றாம் பாகத்தை விஜய் கிருஷ்ணா ஆச்சார்யாவும் இயக்கினர்.
அபிஷேக் பச்சன், உதய் சோப்ரா இருவரும் மூன்று பாகங்களிலும் நடிக்க, இன்னொரு பிரதான வேடத்தில் முதல் பாகத்தில் ஜான் ஆப்ரஹாமும், இரண்டாம் பாகத்தில் ஹ்ருத்திக் ரோஷனும், மூன்றாம் பாகத்தில் ஆமிர் கானும் நடித்தனர்.
மூன்றாம் பாகம் வெளியாகி 5 வருடங்களுக்குப் பிறகு, தற்போது நான்காம் பாகத்துக்கான வேலைகள் தொடங்கியுள்ளன. இதில், பிரதான வேடத்தில் சல்மான் கான் நடிக்கலாம் எனப் பாலிவுட் மீடியாக்கள் கிசுகிசுக்கின்றன. அத்துடன், கத்ரினா கைஃப்பிடம் ஹீரோயினாகவும் நடிக்கக் கேட்டிருக்கிறார்களாம். ஏற்கெனவே ‘தூம் 3’ படத்தில் நடித்திருக்கிறார் கத்ரினா கைஃப்.
அப்படி சல்மான் கான் - கத்ரினா கைஃப் இருவரும் இணைந்தால், ஆறாவது முறையாக இருவரும் இணைந்து நடிக்கும் படம் இது. இருவரும் இணைந்தால், ரொமான்ஸ் காட்சிகளில் தூள் பறக்கும் என ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர் இருவரது ரசிகர்களும்.