சயாமி கெர்
சயாமி கெர்

அயன்மேன் டிரையத்லான் போட்டியை முடித்த முதல் இந்திய நடிகை

Published on

பிரபல இந்தி நடிகை சயாமி கெர். தெலுங்கிலும் சில படங்களில் நடித்துள்ள இவர், ஜெர்மனி தலைநகர் பெர்லினில் நடந்த 'அயன்மேன் டிரையத்லான் 70.3' போட்டியை முடித்த முதல் இந்திய நடிகை என்ற பெயரைப் பெற்றுள்ளார். இந்தக் கடினமானப் போட்டி 1.9 கி.மீ நீச்சல், 90 கி.மீ சைக்கிள், 21.1 கி.மீ ஓட்டம் ஆகியவற்றை உள்ளடக்கியது.

சயாமியைத் தவிர, இந்த டிரையத்லானில் பங்கேற்ற ஒரே இந்திய நடிகர் மிலிந்த் சோமன். இதுபற்றிதனது சமூக வலைதளப் பக்கத்தில் தெரிவித்துள்ள சயாமி கெர்,‘அயன்மேன் 70.3' போட்டிக்காகக் கடுமையான பயிற்சி மேற்கொண்டேன்.இறுதியாக நினைத்ததைச் சாதித்துவிட்டேன். இந்தப் போட்டியில் பதக்கத்தைப் பெறுவது என் வாழ்வின் பெருமையான தருணங்களில் ஒன்று. நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in