பாலிவுட் நடிகை மலைகா அரோராவின் தந்தை தற்கொலை: காவல்துறை விசாரணை

நடிகை மலைகா அரோரா குடும்பம்
நடிகை மலைகா அரோரா குடும்பம்
Updated on
1 min read

மும்பை: மும்பை பாந்த்ராவில் உள்ள அடுக்குமாடியிலிருந்து குதித்து பாலிவுட் நடிகை மலைகா அரோராவின் தந்தை தற்கொலை செய்துகொண்டார். மேலும் தற்கொலைக்கான காரணங்கள் எதுவும் வெளியாகவில்லை. இது தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மாடலிங்கில் தனது கரியரைத் தொடங்கிய மலைகா அரோரா நடிகையாக பாலிவுட் படங்களில் கவனம் ஈர்த்தார். சல்மான் கானின் ‘தபாங்’ பட சீரிஸ்களில் நடித்துள்ளார். மேலும் ‘தில் சே’ படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார். இந்நிலையில் மும்பை பாந்த்ரா குடியிருப்பு பகுதிகளில் வசித்து வந்த மலைகா அரோராவின் தந்தை அனில் அரோரா மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டார். இது தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மலைகா அரோரா 11 வயது இருக்கும் போது அவரது தாய் - தந்தை இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்து விட்டனர். அவரது தந்தை அனில் அரோரா கடற்படையில் பணியாற்றியவர். மலைகா அரோராவின் தங்கை அம்ரிதா அரோராவும் நடிகையாக வலம் வருகிறார். மலைகாவின் கணவர் அர்பாஸ் அரோரா பாலிவுட்டின் முன்னணி நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர் என்பது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in