

இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ், சல்மான் கான் நடிக்கும் ‘சிக்கந்தர்’ படத்தை இயக்கி வருகிறார். இந்தியில் உருவாகும் இந்தப் படம், பான் இந்தியா முறையில் தமிழ், தெலுங்கிலும் வெளியாக இருக்கிறது. இதில் சத்யராஜ் வில்லனாக நடிக்கிறார்.
ஆக்ஷன் காட்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாகும் இதன் படப்பிடிப்பு மும்பையில் கடந்த மாதம் தொடங்கியது. இந்தப் படத்தில் காஜல் அகர்வால் இணைந்துள்ளதாகவும் அவர் முக்கிய வேடத்தில் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. அவர் என்ன வேடத்தில் நடிக்க இருக்கிறார் என்பது பற்றிய தகவலை படக்குழு வெளியிடவில்லை.