ஏ.ஆர்.முருகதாஸ் படத்துக்காக ரூ.15 கோடியில் தாராவி செட்!

ஏ.ஆர்.முருகதாஸ் படத்துக்காக ரூ.15 கோடியில் தாராவி செட்!
Updated on
1 min read

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சல்மான் கான் நடிக்கும் படம், ‘சிக்கந்தர்’. பான் இந்தியா படமாக உருவாகும் இந்தப் படத்தை சஜித் நாடியத்வாலா தயாரிக்கிறார். ராஷ்மிகா மந்தனா நாயகியாக நடிக்கிறார். சத்யராஜ், பிரதீக் பப்பர் உட்பட பலர் நடிக்கின்றனர். ஆக்‌ஷனுக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாகும் இந்தப் படத்தில் நடித்தபோது சல்மான் கானுக்கு விலா எலும்பில் காயம் ஏற்பட்டது.

சிகிச்சைக்குப் பின் படப்பிடிப்பில் அவர் மீண்டும் இணைந்துள்ளார். இந்தப் படத்துக்காக மும்பையில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் தாராவி மற்றும் மாதுங்காவை போல, கோரேகானில் பிரம்மாண்ட செட் அமைக்கப்பட்டுள்ளது. ரூ. 15 கோடியில் அமைக்கப்பட்டுள்ள இந்த செட்டில் இப்போது படப்பிடிப்பு நடந்து வருகிறது. ஆக்‌ஷன் காட்சிகள் மட்டுமின்றி எமோஷனல் காட்சிகளும் இங்கு படமாக்கப்படுகின்றன. இந்த ஷெட்யூல் முடிந்ததும் அடுத்த கட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடக்கிறது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in