படம் தயாரிக்க கடன்: காமெடி நடிகரின் சொத்து பறிமுதல்

படம் தயாரிக்க கடன்: காமெடி நடிகரின் சொத்து பறிமுதல்
Updated on
1 min read

நகைச்சுவை நடிகர் ராஜ்பால் யாதவ். இவர், ஹங்கம்மா, கிரிஷ் 3, கரம் மசாலா, கட்டா மிட்டா உட்பட ஏராளமான படங்களில் நடித்துள்ளார். கடந்த 2012-ம் ஆண்டு ‘அதா பதா லாபதா’ என்ற படத்தை இவர் தயாரித்து நாயகனாக நடித்தார். இதற்காக தனது மனைவி ராதா பெயரில் ஸ்ரீ நரங் கோதாவரி என்டர்டெயின்மென்ட் என்ற நிறுவனத்தைத் தொடங்கினார்.

இதில் அஸ்ராணி, ஓம்புரி, அஷுதோஷ் ராணா உட்பட பலர் நடித்தனர். இந்தப் படத்துக்காக மும்பையில் உள்ள சென்ட்ரல் பாங்க் ஆப் இந்தியா வங்கியில் ரூ.3 கோடி கடன் வாங்கியிருந்தார். வட்டியுடன் சேர்ந்து பல கோடி ஆனது. அதைத் திருப்பிக் கொடுக்கவில்லை.

இதனால் உத்தரபிரதேச மாநிலம் ஷாஜகான்பூரில் ராஜ்பால் யாதவுக்குச் சொந்தமான வீட்டை வங்கி அதிகாரிகள் சமீபத்தில் பறி முதல் செய்து சீல் வைத்தனர். ‘இது வங்கிக்கு சொந்தமான இடம்’ என்று போர்டையும் அங்கு வைத்துள்ளனர்.

இந்தப் படத்துக்கு வாங்கிய கடனுக்காக ராஜ்பால் கொடுத்த காசோலை. பணம் இல்லாமல் திரும்பியதால் தொழிலதிபர் எம்.ஜி.அகர்வால் என்பவர் மோசடி வழக்குத் தொடுத்திருந்தார் இந்த வழக்கில் ராஜ்பால் யாதவ் கடந்த 2018-ம் ஆண்டு கைது செய்யப்பட்டிருந்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in