டெல்லி தொழிலதிபரை மணக்கிறார் சோனம் கபூர்

டெல்லி தொழிலதிபரை மணக்கிறார் சோனம் கபூர்
Updated on
1 min read

டெல்லி தொழிலதிபர் ஆனந்த் அகுஜாவை மணக்கிறார் பாலிவுட் நடிகை சோனம் கபூர்.

பிரபல பாலிவுட் நடிகர், தயாரிப்பாளர், தொழிலதிபர் எனப் பல முகங்கள் கொண்டவர் அனில் கபூர். அவருடைய மகளான சோனம் கபூர், சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் அமிதாப் பச்சன், ராணி முகர்ஜி நடித்த ‘பிளாக்’ படத்தில் உதவி இயக்குநராகப் பணியாற்றினார்.

2007ஆம் ஆண்டு சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் வெளியான ‘சாவரியா’ படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். இந்தப் படத்தில் ரன்பீர் கபூர், சல்மான் கான், ராணி முகர்ஜி ஆகியோர் நடித்தனர். இந்தப் படத்தைத் தொடர்ந்து ஏராளமான பாலிவுட் படங்களில் நடித்து வருகிறார். 2016ஆம் ஆண்டு வெளியான ‘நீரஜா’ படத்துக்காக, சிறப்புப் பிரிவில் சிறந்த நடிகைக்கான தேசிய விருது பெற்றார்.

இந்நிலையில், சோனம் கபூருக்குத் திருமணம் செய்து வைக்க அவருடைய பெற்றோர்கள் முடிவு செய்துள்ளனர். டெல்லியைச் சேர்ந்த தொழிலதிபர் ஆனந்த் அகுஜாவுக்கும், சோனம் கபூருக்கும் வருகிற 8 ஆம் தேதி மும்பையில் பிரமாண்டமாகத் திருமணம் நடைபெற உள்ளது. இருவரும் ஏற்கெனவே காதலித்து வந்த நிலையில், திருமணம் முடிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த திருமணத்தில் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டுமே கலந்துகொள்ள இருக்கின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in