“நாங்கள் இதையெல்லாம்...” - விவாகரத்து வதந்திகளால் அபிஷேக் பச்சன் ஆதங்கம்

“நாங்கள் இதையெல்லாம்...” - விவாகரத்து வதந்திகளால் அபிஷேக் பச்சன் ஆதங்கம்
Updated on
1 min read

மும்பை: “உங்களுக்கு பரபரப்பான செய்திகள் வேண்டும் என்பதற்காக இதனை ஊதிப் பெரிதாக்குகிறீர்கள். பிரபலங்களாக இருப்பதால் நாங்கள் இதையெல்லாம் ஏற்றுகொண்டுதான் ஆக வேண்டியிருக்கிறது” என விவாகரத்து வதந்தி குறித்து பாலிவுட் நடிகர் அபிஷேக் பச்சன் ஆதங்கத்துடன் பேசியுள்ளார்.

பாலிவுட் நடிகர் அபிஷேக் பச்சனும், ஐஸ்வர்யா ராயும் விவாகரத்து செய்ய போகிறார்கள் என்ற வதந்தி சமூக வலைதளங்களில் பரவியது. இது தொடர்பாக அபிஷேக் பச்சன் அளித்த பேட்டியில், "நான் இன்னுமே திருமணமானவன் தான். எங்களுக்கிடையில் எந்தப் பிரச்சினையும் இல்லை. நீங்கள்தான் இதனை ஊதிப் பெரிதாக்கிக் கொண்டிருக்கிறீர்கள். உங்களின் பரபரப்பான செய்திகளுக்காக நீங்கள் இப்படி செய்கிறீர்கள் என்பது எனக்குப் புரிகிறது. இந்த வதந்திகளுக்கெல்லாம் நான் எந்த பதிலும் சொல்லப்போவதில்லை. பிரபலங்களாக இருப்பதால் இதையெல்லாம் நாங்கள் ஏற்றுக் கொண்டுதான் ஆக வேண்டியிருக்கிறது” என தெரிவித்துள்ளார்.

அபிஷேக் பச்சனுக்கும், ஐஸ்வர்யா ராய்க்கும் கடந்த 2007-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவர்களின் மகள் ஆராத்யா கடந்த 2011-ம் ஆண்டு பிறந்தார். இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் அபிஷேக் - ஐஸ்வர்யா ராய் தங்களது 17-ஆம் ஆண்டு திருமண நாளை கொண்டாடியது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in