ராமாயணம் படத்துக்காக 12 பிரம்மாண்ட செட்கள்

ராமாயணம் படத்துக்காக 12 பிரம்மாண்ட செட்கள்

Published on

பாலிவுட் இயக்குநர் நிதேஷ் திவாரி இயக்கத்தில் ராமாயணக் கதை திரைப்படமாக உருவாகிறது. இதில், ரன்பீர் கபூர் ராமராகவும் சாய் பல்லவி சீதையாகவும் நடிக்கின்றனர். யாஷ் ராவணனாக நடிக்கிறார். தொலைக்காட்சித் தொடராக வெளியான ராமாயணக் கதையில் ராமராக நடித்த அருண் கோவில், இதில் தசரதனாக நடிக்கிறார். ரகுல் ப்ரீத் சிங், லாரா தத்தா, சன்னி தியோல் எனபலர் நடிக்கின்றனர். தமிழ், தெலுங்கு, இந்தி உட்பட பல்வேறு மொழிகளில் படம் உருவாகிறது.

இந்தப் படத்துக்காக மும்பை திரைப்பட நகரில் 12 பிரம்மாண்ட செட்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. இதில் அயோத்தி, மிதிலை நகர் அரங்குகளும் அடக்கம். 3டி வடிவமைப்புக்கு ஏற்றவாறு அமைக்கப்படும் இந்த அரங்கு பணிகள் அடுத்த மாதம் 15-ம் தேதிக்குள் முடிவடையும் என்கிறார்கள். பிறகு படப்பிடிப்பு தொடங்க இருக்கிறது. இரண்டு பாகங்களாக உருவாகும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு டிச.2025-க்குள் முடிவடையும் என்று தெரிகிறது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in