அம்பானி இல்ல திருமண விழாவில் அட்லீ இயக்கிய அனிமேஷன் படம்.. குரல் கொடுத்த அமிதாப் பச்சன்!

அம்பானி இல்ல திருமண விழாவில் அட்லீ இயக்கிய அனிமேஷன் படம்.. குரல் கொடுத்த அமிதாப் பச்சன்!
Updated on
1 min read

மும்பை: அம்பானி இல்லத் திருமண விழாவில் அட்லீ இயக்கிய 10 நிமிட அனிமேஷன் வீடியோ ஒளிபரப்பப்பட்டதாகவும், அந்த வீடியோவுக்கு நடிகர் அமிதாப் பச்சன் பின்னணி குரல் கொடுத்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானி - ராதிகா மெர்சண்ட் திருமணம் கடந்த ஜூலை 12-ம் தேதி மும்பையில் உள்ள ஜியோ உலக மாநாட்டு மையத்தில் நடைபெற்றது. இதில் இங்கிலாந்து முன்னாள் பிரதமர் போரீஸ் ஜான்சன், டோனி பிளேர், WWE வீரர் ஜான்சினா உள்ளிட்ட வெளிநாட்டு பிரபங்களும், ஷாருக்கான், ரஜினிகாந்த், அமிதாப் பச்சன், மகேஷ்பாபு, அட்லீ உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

திருமண நிகழ்வில் கலந்துகொண்ட பிரபல யூடியூபர் ரன்பீர் அல்லாபாடியா, அம்பானி இல்லத் திருமண விழாவின் அனுபவம் குறித்து தனது யூடியூப்பில் பேசி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர், “திருமணத்தின் இரண்டாம் நாளில், விருந்தினர்களுக்காக 10 நிமிட படம் நிகழ்வில் ஒளிபரப்பப்பட்டது. அனிமேஷன் படமான அதனை இயக்குநர் அட்லீ இயக்கியிருந்தார்.

அமிதாப் பச்சன் அதற்கு பின்னணி குரல் கொடுத்திருந்தார்” என தெரிவித்துள்ளார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. மேலும் அம்பானி இல்லத்திருமணத்தில் அட்லீ அனிமேஷன் வீடியோ இயக்கியிருப்பது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. முன்னதாக அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் வெளியான ‘ஜவான்’ திரைப்படம் ரூ.1000 கோடிக்கும் அதிகமான வசூலை குவித்தது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in