பிரபல நடிகையிடம் இத்தாலியில் கொள்ளை

திவ்யங்கா திரிபாதி
திவ்யங்கா திரிபாதி
Updated on
1 min read

பிரபல இந்தி சின்னத்திரை நடிகை திவ்யங்கா திரிபாதி. இவர் கணவர் விவேக் தாஹியா. இவரும் சின்னத்திரை நடிகர். இருவரும் தங்களது 8-வது திருமண நாளை, கொண்டாடுவதற்காக கடந்த சில நாட்களுக்கு முன் இத்தாலி சென்றனர். அங்கு பல்வேறு பகுதிகளில் எடுத்த அழகான புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வந்தனர்.

இந்நிலையில் அங்குள்ள புளோரன்ஸ் நகருக்கு கடந்த 10-ம் தேதி சென்ற அவர்கள்,தங்கள் காரில், பாஸ்போர்ட், பணம் மற்றும் ஷாப்பிங் செய்த பொருட்களை வைத்துவிட்டு வெளியே சென்றனர். திரும்பி வந்து பார்த்தபோது கார் கதவு உடைக்கப்பட்டு உள்ளே இருந்த பாஸ்போர்ட் மற்றும் ரூ.10 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் திருடப்பட்டிருந்தது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள், என்ன செய்வதென்று தெரியாமல் தவித்தனர். இதுகுறித்து சமூக வலைதளத்தில் பதிவிட்ட அவர்கள் உதவி கேட்டிருந்தனர். இதையடுத்து சிலர் அவர்களுக்கு உதவியுள்ளனர்.

இதுபற்றி திவ்யங்கா திரிபாதி கூறும்போது, “நண்பர் ஒருவர் தனது கிரெடிட் கார்டை கொடுத்து எங்களுக்கு உதவி செய்துள்ளார். இப்போது எங்களால் ஆன்லைன் பரிவர்த்தனைகளைச் செய்ய முடிகிறது. தற்காலிக பாஸ்போர்ட்டுக்காக, தூதரகத்துக்குச் செல்கிறோம். பிரச்சினை முடிந்துவிடும் என்று நம்புகிறோம்” என்று தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in