வீடுகளை அடமானம் வைத்த தமன்னா

வீடுகளை அடமானம் வைத்த தமன்னா
Updated on
1 min read

நடிகை தமன்னா, ஜான் ஆப்ரஹாமுடன் இப்போது ‘வேதா’ என்ற இந்திப் படத்தில் நடித்துள்ளார். இது, ஆக.15-ம் தேதி வெளியாக இருக்கிறது. அடுத்து இந்தியில் ஸ்ட்ரீ 2, தெலுங்கில் ஒடேலா 2 படங்களில் நடித்து வருகிறார்.

தமன்னாவுக்கு மும்பை அந்தேரி மேற்கு வீர தேசாய் சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் 3 வீடுகள் உள்ளன. இதை இந்தியன் வங்கியில் ரூ.7.84 கோடிக்கு அடமானம் வைத்துள்ளார். மேலும் மும்பை ஜுஹு பகுதியில் 6,065 சதுர அடியில் அலுவலகம் ஒன்றை மாதம் ரூ.18 லட்சத்துக்கு வாடகைக்கு எடுத்துள்ளார். ஐந்து வருடத்துக்கு இந்த வாடகை ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in