‘சிக்கந்தர்’ அடுத்த ஷெட்யூலுக்காக மும்பையில் பிரம்மாண்ட செட்!

‘சிக்கந்தர்’ அடுத்த ஷெட்யூலுக்காக மும்பையில் பிரம்மாண்ட செட்!
Updated on
1 min read

இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ், சல்மான் கான் நடிக்கும் ‘சிக்கந்தர்’ படத்தை இயக்கி வருகிறார். இதில் ராஷ்மிகா மந்தனா நாயகியாக நடிக்கிறார். பிரதீக் பப்பர், சத்யராஜ் வில்லன்களாக நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. இதன் படப்பிடிப்பு பிரம்மாண்ட ஆக்‌ஷன் காட்சியுடன் மும்பையில் தொடங்கியது. முதல் கட்டப் படப்பிடிப்பு நேற்றுடன் முடிவடைந்துவிட்டது.

அடுத்தக்கட்டப் படப்பிடிப்பு ஆகஸ்ட் மாதம் நடக்க இருக்கிறது.இதற்காக மும்பை கோரேகான் பகுதியில் செட் அமைக்கும் பணி நடந்துவருகிறது. ஏராளமான துணை நடிகர்களுடன் பெரும்கூட்டத்தில் காட்சிகள் நடப்பது போல படமாக்கப்பட இருக்கின்றன. அடுத்தக் கட்ட படப்பிடிப்பு சுமார் 40 நாட்கள் நடக்கும் என்கிறார்கள். இதற்கிடையே சென்னை திரும்பும் முருகதாஸ், சிவகார்த்திகேயன் படத்தின் பணிகளை மேற்கொள்ள இருக்கிறார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in